விளையாட்டு
சீன ஓபன் சூப்பர் சீரிஸ்: சாய்னா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
சீன ஓபன் சூப்பர் சீரிஸ்: சாய்னா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் பிரதான சுற்று போட்டிகள் புஸ்கோவ் நகரில் இன்று தொடங்கியது. உலகத் தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள சாய்னா, முதல் சுற்றில் 12ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் தொடக்கம் முதலே சாய்னா ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்றை சாய்னா 21-12 என கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அதிரடியாக விளையாடிய சாய்னா அந்த சுற்றையும் 21-13 என கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாய்னா இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.