\
சாய்னா வாழ்க்கை வரலாறு பட ஷூட்டிங் ஆரம்பம்!

சாய்னா வாழ்க்கை வரலாறு பட ஷூட்டிங் ஆரம்பம்!

சாய்னா வாழ்க்கை வரலாறு பட ஷூட்டிங் ஆரம்பம்!
Published on

பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நோவல் வாழ்க்கை வரலாறில் ஷ்ரத்தா கபூர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

விளையாட்டு வீரர்களான மேரிகோம், தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியான நிலையில், பேட்மிண்டன் சாம்பியனான சாய்னா நோவலின் வாழ்க்கை வரலாற்றுப்படமும் தயாராகி வருகிறது.  இந்தப் படத்தில் ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் சாய்னா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. பாகுபலி நாயகன் பிரபாஸ் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். சாஹோ படத்தில் ஷ்ரத்தா கப்பூர் ஜோடியாக நடித்து வருவதால் ஷூட்டிங்கை நட்பின் அடிப்படையில் பிரபாஸ் தொடங்கி வைத்துள்ளார். ஷ்ரத்தா கபூர் சாய்னா வாழ்க்கை வரலாற்றுப்படத்திலும், சாஹோ படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com