பேட்டிங்கிற்கு நடுவே பிரேக் சென்ற தமிழக வீரர்..காத்திருந்த பஞ்சாப் வீரர்கள்! நடந்தது என்ன?

பேட்டிங்கிற்கு நடுவே பிரேக் சென்ற தமிழக வீரர்..காத்திருந்த பஞ்சாப் வீரர்கள்! நடந்தது என்ன?
பேட்டிங்கிற்கு நடுவே பிரேக் சென்ற தமிழக வீரர்..காத்திருந்த பஞ்சாப் வீரர்கள்! நடந்தது என்ன?

நேற்று பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிராக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் துவக்க ஆட்ட பதற்றத்தில் அதிக நேரம் கழிவறையில் செலவிட்ட நிலையில் நிதானமாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார்.

நேற்று நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்துகளில் ராகுல் தெவாட்டியாவின் அதிரடி சிக்ஸர்கள், ஆறு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி மறக்கமுடியாத வெற்றியைப் பெற உதவியது. ஐபிஎல் 2022 இல் தோல்வியே காணாத குஜராத்தின் பயணம் மீண்டும் தொடர்கிறது. குஜராத் அணியின் ஓப்பனர் மேத்யூ ஹெட் ஆறு ரன்களில் நடையைக் கட்ட சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார் தமிழகத்தைச் சேர்ந்த அறிமுக வீரர் சாய் சுதர்சன். சுப்மன் கில் ஒருபக்கம் அதிரடி காட்டி பவுண்டரிகளாக விளாச, அவருக்கு பக்க பலமாக நின்றார் சுதர்சன்.

21 ரன்களை சுதர்சன் எட்டிய போது இடைவேளை கோரி கழிவறைக்குச் சென்றார். ஆடுகளத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர் சென்றதால் அவரது வருகைக்காக பஞ்சாப் வீரர்கள் மைதானத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு ஆடுகளத்திற்கு திரும்பிய சுதர்சன் மீண்டும் தன் நிதான ஆட்டத்தை தொடர்ந்தார். சுப்மன் கில்லோடு 101 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தார் சுதர்சன். 190 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்த இந்த பார்ட்னர்ஷின் பெரும் பலமாக அந்த அணிக்கு இருந்தது.

தனது ஐபிஎல் அறிமுகப் போட்டியிலேயே 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 35 ரன்கள் எடுத்தார் சுதர்சன். TNPL இல் கடந்த ஆண்டு ஒரு அற்புதமாக விளையாடி கவனம் ஈர்த்தவர் சுதர்சன். அறிமுகப் போட்டி பதற்றம், சுப்மன் கில் மட்டும் அதிரடியாக ஆடி தான் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட பதற்றத்தால் கூட சுதர்சன் நீண்ட நேரம் பிரேக் எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com