6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வெற்றி!

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வெற்றி!
6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, அந்த நாட்டு ஏ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றது. அதிகாரப்பூர்வமற்ற இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் மணீஷ் பாண்டே தலைமையிலான இந்திய ஏ அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன.

முதல் போட்டி ஆண்டிகுவாவில் நடந்து வந்தது. முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, 228 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய ஏ அணி தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் நதீம் 5 விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய ஏ அணி, முதல் இன்னிங்சில்  312 ரன் எடுத்தது. அதிகப்பட்சமாக துபே 71 ரன்னும் விருத்திமான் சாஹா 66 ரன்னும் எடுத்தனர். 

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ, 188 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங் ஸிலும் இந்திய ஏ அணி வீரர், நதீம் 5 விக்கெட் வீழ்த்தினார். சிராஜ் 3 விக்கெட்டை சாய்த்தார். 

இந்திய ஏ அணிக்கு 97 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணி, 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய ஏ அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com