\
ஜாகிர்கானுடன் திருமணம் எப்போது? நடிகை விளக்கம்

ஜாகிர்கானுடன் திருமணம் எப்போது? நடிகை விளக்கம்

ஜாகிர்கானுடன் திருமணம் எப்போது? நடிகை விளக்கம்
Published on

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். இவர் இந்தி நடிகை சகாரிகா காட்கேவை காதலித்து வந்தார். இவர்களின் பல வருட காதல் பற்றி கிசு கிசு வந்துகொண்டிருந்தாலும் திருமணம் செய்துகொள்வது பற்றி வாயே திறக்காமல் இருந்தனர். இந்நிலையில் தனக்கும் சகாரிகாவுக்குமான திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஜாகிர்கான் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து இவர்கள் திருமணம் எப்போது என்பது பற்றி சகாரிகாவிடம் கேட்டபோது, ’இந்த வருட இறுதிக்குள் எங்கள் திருமணம் நடக்கும். இன்னும் தேதி முடிவாகவில்லை. இருந்தாலும் டிசம்பரில் இருக்கும். ஜாகிர்கான் என் மரியாதைக்குரிய நபர். அவருடன் ஜமைக்கா, நியூயார்க், துபாய் சென்று வந்தேன். எனக்கு ஊர் சுற்றுவது பிடிக்கும். ஜாகிருக்கும் பிடிக்கும் என்றாலும் அவர் கிரிக்கெட்டுக்காகவே வெளிநாடுகளுக்கு செல்வார்’ என்றார்.

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பீர்களா என்று கேட்டபோது, ‘கண்டிப்பாக நடிப்பேன். சின்ன படமோ, பெரிய படமோ, நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என் ஆர்வம் ஜாகிருக்கும் தெரியும். அவரும் என் முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்’ என்றார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com