\
''வீடியோவை பார்த்து என் மனைவி கதறி அழுதார்’’ - பாக்., கேப்டன் உருக்கம்

''வீடியோவை பார்த்து என் மனைவி கதறி அழுதார்’’ - பாக்., கேப்டன் உருக்கம்

''வீடியோவை பார்த்து என் மனைவி கதறி அழுதார்’’ - பாக்., கேப்டன் உருக்கம்
Published on: 

தன்னை பன்றி என விமர்சித்து ரசிகர் ஒருவர் பேசிய வீடியோவை பார்த்தபோது தமது மனைவி கதறி அழுததாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டர் சர்பராஸ் அகமது மனம் திறந்து கூறியுள்ளார்.

சமீபத்தில் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய வீடியோ ஒன்றில், சர்பராஸ் அகமது தனது மகனுடன் ஒரு மாலுக்கு சென்றபோது அவரை வழிமறித்த ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் கொழுத்த பன்றி போல் இருக்கிறீர்கள் என கேட்டார். அவருடைய செயல் விமர்சனத்திற்குள்ளான பிறகு அந்த ரசிகர் மன்னிப்பு கோரினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் செய்தியாளரிடம் சர்பராஸ் அகமது கருத்து தெரிவித்தார். அதில் இதைப்பற்றி தாம் எதுவும் சொல்லமுடியாது என்றும், மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கட்டுப்படுத்தமுடியாது என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ எடுக்கப்பட்டபோது தனது மகனும் கூட இருந்தது தனக்கு மேலும் வலியை உண்டாக்கியதாக கூறியுள்ளார். 

அந்த வீடியோவை எடுத்த நபரும் தனது குடும்பத்துடன் இருந்ததால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடமாட்டார் என தாம் நினைத்ததாகவும் சர்பராஸ் கூறியுள்ளார். வீடியோ வெளியான பின்னர் தாம் ஹோட்டல் அறைக்கு வந்தபோது தமது மனைவிஅழுதுகொண்டிருந்ததாகவும், தாம் அவரை சமாதானப்படுத்தியதாகவும் சர்ப்பராஸ் கூறியுள்ளார். 

அந்த வீடியோ எடுக்கப்பட்டபோதே தாம் கோபமாக எதிர்வினையாற்றியிருந்தால் உண்மையில் நடந்தது என்ன என்பது மக்களுக்கு தெரிந்திருக்காது என்று தெரிவித்த சர்பராஸ், வீடியோ வெளியானபிறகு அனைவரும் தனக்கு ஆதரவாக இருந்தனர் என்றும் அவர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com