“களத்தில் நீங்கள் ஒரு போராளி” - இன்சமாம் உடல்நலம் குறித்து சச்சின் ட்வீட்

“களத்தில் நீங்கள் ஒரு போராளி” - இன்சமாம் உடல்நலம் குறித்து சச்சின் ட்வீட்
“களத்தில் நீங்கள் ஒரு போராளி” - இன்சமாம் உடல்நலம் குறித்து சச்சின் ட்வீட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்துக் கொண்டார். இந்நிலையில் அவர் விரைவில் குணம் பெற வேண்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் தளத்தில் வாழ்த்தி இருந்தார். 

“நீங்கள் விரைந்து குணம் பெற விரும்புகிறேன். களத்தில் அமைதியாக இருந்தாலும் நீங்கள் அதிக சவால் கொடுக்கும் வீரர். களத்தில் நீங்கள் ஒரு போராளி. நீங்கள் விரைந்து குணம் பெற வேண்டி பிரார்த்திக்கிறேன்” என சச்சின் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். 

அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது உறுதியானது. அதையடுத்து அவருக்கு ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நலன் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com