‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து

‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து
‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து

உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு தனது படங்களை எடுத்த புகைப்பட நிபுணர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் இன்று புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தங்களின் முக்கிய புகைப்படங்களை அதன் நினைவுகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அதில், “எனது வாழ்வில் மிகவும் முக்கியமான தருணங்களை படம் பிடித்து நான் நினைவுக் கூரும் வகையில் அமைத்த புகைப்பட கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த புகைப்பட தின வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் சச்சின் தனது புகைப்படங்களை சிலவற்றையும் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com