ஹெல்மெட்டின் அருமை எனக்கு தெரியும் ! சச்சின் டெண்டுல்கர் கடிதம்

ஹெல்மெட்டின் அருமை எனக்கு தெரியும் ! சச்சின் டெண்டுல்கர் கடிதம்

ஹெல்மெட்டின் அருமை எனக்கு தெரியும் ! சச்சின் டெண்டுல்கர் கடிதம்
Published on

இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான சச்சின் டெண்டுகல்கர் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பான பிரசாரங்களிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார், அதில் " இரு சக்கரவாகனத்தில் செல்பவர்களுக்கு தலைக் கவசம் மிகவும் முக்கியமானது. அது மனிதனின் உயிரைக் காக்க கூடியது. அதன் அவசியம் என்ன என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், சில நிறுவனங்கள் தரமற்ற மூலப்பொருட்களைக் கொண்டு, தரமில்லாத, வாகன ஓட்டிகளின் உயிரை பாதுகாக்கும் திறனில்லாத ஹெல்மெட்களை தயாரித்து வருகின்றனர். மேலும், போலியான ஐ.எஸ்.ஐ, முத்திரையையும் ஹெல்மெட்டில் பதிக்கின்றனர்.
அவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரராக இருக்கும் நான் விளையாடும் போதும், ஹெல்மெட் எந்த அளவுக்கு முக்கியம், தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவன். ஹெல்மெட் போன்ற உயிர்காக்கும் கருவிகள் அதிக உயர்தரமான பொருட்களால் தயாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் களத்தில் துணிச்சலாக வீரர்கள் விளையாட முடியும்.

இதே போலத்தான் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அணியும் ஹெல்மெட்டும் உயர்ந்த தரத்தில் இருப்பது அவசியம் என நம்புகிறேன். இருசக்கர வாகன ஓட்டிகளில் விபத்தில் சிக்கி உயிரிழப்புகளில் 70 சதவீதம் பேர் தரமற்ற ஹெல்மெட்களை அணிந்ததால், உயிரிழந்தனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட்களை எளிதாக வாங்கும் வகையில், அதன் தரத்தை அதிகப்படுத்தி, குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பை மேம்படுத்த நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் நான் ஒத்துழைப்பு தருகிறேன் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com