\
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன சச்சின் டெண்டுல்கர்

பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன சச்சின் டெண்டுல்கர்

பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன சச்சின் டெண்டுல்கர்
Published on

மான் கி பாத் உரையில் மாணவர்களுக்கு தன்னை முன்னுதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுக்கு மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்றைய மான் கி பாத் நிகழ்ச்சியில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான அறிவுரைகளை பிரதமர் மோடி வழங்கினார். அதன் ஒருபகுதியாக சச்சினின் வாழ்க்கையைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, மற்றவர்களோடு போட்டிபோடாமல், தனது சாதனைகளையே முறியடித்த அவரது வாழ்க்கை பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழ்வது என்று பாராட்டினார். பிரதமரின் இந்த பாராட்டுக்கு ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், விளையாட்டு வீரராக இருந்தாலும், மாணவர்களாக இருந்தாலும் முறையான பயிற்சியே ஒவ்வொருவருக்கும் வெற்றிக்கான திறவுகோல் என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com