“என் சக ராசிக்காரருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” - லாரவை வாழ்த்திய சச்சின்
இன்றைக்குப் பிறந்தநாள் கொண்டாடும் பிரையன் லாராவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் தனது இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரை சக வீரர்கள் அனைவரும் வாழ்த்து மழையால் மூழ்கடித்தனர். அதேபோல் இன்று கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா இன்று தனது 51 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்குப் பலரும் வாழ்த்துகூறி வருகின்றனர்.
இந்நிலையில், சச்சின் அவரது இன்ஸ்டா பக்கத்தில் தனது சக ராசிக்காரனான கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவை வாழ்த்தியுள்ளார். இது சம்பந்தமாக சச்சின் அவரது பதிவில், “எனது சக ராசிக்காரரை வாழ்த்துகிறேன். ஒரு சிறப்பான பிறந்தநாள். சமீபத்தில் உங்களுடன் இருந்த குறும்பான தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. அது சிறப்பான ஒன்று. விரைவில் உங்களைச் சந்திப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு உலகத் தொடருக்காகக் களம் கண்டவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சச்சின் மற்றும் லாரா ஆகியோர் அடங்குவர். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் 20/20 போட்டியாக உலகத் தொடர் திட்டமிடப்பட்டது. மேலும் சாலை பாதுகாப்பு உலகத் தொடர் மார்ச் 7 முதல் 22 வரை இந்தியா முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்தப் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.