கோல்ஃப் விளையாடுவது போன்ற வீடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் மிக்க ஆட்டக்காரர் சச்சின். முறியடிக்க முடியாத பல சாதனைகளை கிரிக்கெட்டில் நிகழ்த்திவர். கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தற்போது நாடாளுமன்ற சிறப்பு எம்.பி. ஆக உள்ளார்.
இந்நிலையில், கோல்ஃப் விளையாடுவது போன்ற வீடியோ ஒன்றினை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சச்சின் பந்தினை அழகாக குழிக்குள் அடிக்கிறார். மேலும், நண்பர்களுடன் நேரம் செலவிடுவதற்கும், விளையாடுவதற்கும் முடியாத நிலையில் இருப்பதாக அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். சச்சின் கோல்ஃப் விளையாடும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள்.