கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் பிரபல பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இணைந்து பாடியுள்ள பாடல் வீடியோ வெளிவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவியுள்ள இந்த ஒரு நிமிட வீடியோவில் கிரிக்கெட் சம்பந்தமான பாடலை சச்சின் பாடியுள்ளார். பாடலின் நடுவில் “சச்சின்...சச்சின்...” என ரசிகர்களின் குரலும் வருகிறது.
இந்த பாடல் குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர், “எனக்கு இசை மிகவும் பிடித்த விஷயமாக இருந்தாலும், நான் பாடுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை. சோனு நிகாமும் மற்றவர்களும் இணைந்து என்னை பாட வைத்தனர்”என்று கூறினார். சோனு நிகாமிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.