\
''SAVE WATER'' என்று சொன்னது என்னாச்சு சச்சின்?! - விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ!

''SAVE WATER'' என்று சொன்னது என்னாச்சு சச்சின்?! - விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ!

''SAVE WATER'' என்று சொன்னது என்னாச்சு சச்சின்?! - விமர்சனத்துக்கு உள்ளாகும் வீடியோ!
Published on

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் மற்றும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவால், சச்சின் இப்போது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறார்.

நேற்று அவர் பகிர்ந்த வீடியோவில், ‘’ கிரிக்கெட் பேட்டின் கைப்பிடியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று செய்துக்காண்பிக்கிறார். சோப் மற்றும் தண்ணீரால், அவர் சுத்தம் செய்து காட்டும் போது, பைப்பை திறந்துவிட்டுக்கொண்டே வீடியோவில் பேசிக்கொண்டு இருக்கிறார்.

மேலும் இந்த முறையை யாரும் அவருக்குச் சொல்லிக்கொடுக்கவில்லை என்றும் இது அவரது ‘ஸ்பெஷல் வழிமுறை’ என்றும் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோவிற்கு கீழே, ‘’தயவுசெய்து தண்ணீரைச் சேமியுங்கள் சச்சின் என்று கருத்து தெவித்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். மேலும் ’அவர் மற்றவர்களுக்கு சொன்னதை அவரே செய்யவில்லை’ என்று விமர்சித்து வருகிறார்கள்.

காரணம், 2017ல், ஹோலி பண்டிகையின் போது, அவர் பகிர்ந்த ஒரு ட்வீட்டில் ” வண்ணங்களைப் பூசி மகிழ்வதோடு, அந்த வண்ணத்தை உடலில் இருந்து நீக்குவதற்காக ஏராளமான நீரைச் செலவு செய்ய வேண்டி இருக்கும். அதனால், ‘அளவோடு வண்ணத்தைப் பூசி மகிழுங்கள்! அதேசமயம் நீரையும் சேமியுங்கள்’ என்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் வீடியோ காண- https://www.instagram.com/p/CicuzjTAeFW/

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com