\
காலை உணவு சமைத்துக்கொடுத்த மகன்... சச்சின் நெகிழ்ச்சி..!

காலை உணவு சமைத்துக்கொடுத்த மகன்... சச்சின் நெகிழ்ச்சி..!

காலை உணவு சமைத்துக்கொடுத்த மகன்... சச்சின் நெகிழ்ச்சி..!
Published on

சச்சின் டெண்டுல்கருக்கு அவரது மகன் அர்ஜுன் காலை உணவு தயாரித்து கொடுத்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார். தனது வாழ்க்கையில் நடைபெறும்  நிகழ்வுகளின் போட்டாக்களை அவ்வப்போது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களோடு தொடர்பிலும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் மற்றும் இண்ஸ்ட்டாகிரம் பக்கத்தில் சச்சின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கர் பெட்டில் இருக்கிறார். அருகில் சமைத்த உணவும் இருக்கிறது. இது சச்சினின் மகன் செய்து கொடுத்த காலை உணவாகும். சச்சின் கூடவே கேப்சனில், "என் மகன் தயாரித்த காலை உணவு. இதுவரை நான் உண்ட காலை உணவுகளிலே இதுதான் சிறந்தது" என கூறியுள்ளார். சச்சின் இந்த புகைப்படத்தை அவரின் ஏராளமான ரசிகர்கள் தங்களது பக்கத்திலும் பகிர்ந்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com