\
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்

‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்

‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
Published on

சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள் என்று மக்களிடம் இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள்  நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் சென்னையில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது இவருடைய எல்போ கார்ட் தொடர்பாக ஹோட்டல் ஊழியர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்பின்பு சச்சின் டெண்டுல்கர் அதனை மாற்றி அமைத்துள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார். அத்துடன் தனது பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், “எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com