தமிழக கபடி டீமுக்கு சச்சின் ஓனர்

தமிழக கபடி டீமுக்கு சச்சின் ஓனர்

தமிழக கபடி டீமுக்கு சச்சின் ஓனர்
Published on

புரோ கபடி லீக் தொடரில், தமிழ‌க அணியின் ‌சக உரிமையாளராக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இணைந்துள்ளார்.

புரோ கபடி லீக் போட்டி 2014ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரட்ஸ், புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பை ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை நகரை மையமாகக் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தொழில் அதிபர் என்.பிரசாத் ஆகியோர் இணைந்து வாங்கி இருக்கின்றனர். அடுத்த புரோ கபடி ஜூலை 5ஆம் தேதி தொடங்குகிறது‌.

சச்சின் டெண்டுல்கர், ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடும் கேரள அணியின் சக உரிமையாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com