தனக்கு கிரிக்கெட் பேட் வடிவமைத்து கொடுத்தவருக்கு தக்க நேரத்தில் உதவிய சச்சின்!
சச்சின், சேவாக், கெய்ல், கோலி, ஸ்மித் உட்பட பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் பேட்டை வடிவமைப்பதில் வல்லவர் மும்பையை சேர்ந்த 67 வயதான அஷ்ரப் சவுத்ரி.
அவர் வடிவமைத்த மற்றும் ரிப்பேர் செய்து கொடுத்த கிரிக்கெட் பேட்களை கொண்டு பல பேட்ஸ்மேன்கள் சர்வதேச களத்தில் ரன்களை குவித்து வருகின்ற சூழலில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘எப்போதுமே பிசியாக இருக்கும் அவரை முதலில் கொரோனா பொருளாதார ரீதியாக முடக்கி போட்டது. தற்போது உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே கிட்னி மற்றும் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என சொல்கிறார் சவுத்ரியின் நண்பர் பிரஷாந்த் ஜெத்மலானி.
இந்நிலையில் அஷ்ரப் சவுத்ரியின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் அவரது மருத்துவ செலவுக்கான தொகையில் பெரும் பகுதியை கொடுத்து உதவியுள்ளதாக தெரிவித்துள்ளார் பிரஷாந்த்.