நான் பார்த்ததிலே... பான்ட்டை பாராட்டும் சச்சின்!

நான் பார்த்ததிலே... பான்ட்டை பாராட்டும் சச்சின்!
நான் பார்த்ததிலே... பான்ட்டை பாராட்டும் சச்சின்!

ஐபிஎல் வரலாற்றில், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ரிஷாப் பான்ட் என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி, குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய குஜராத் அணி, 208 ரன்கள் குவித்தது. அந்த ரன்னை விரட்டிய டெல்லி அணியின், ரிஷாப் பான்ட் பவுண்டரிகளாகவும் சிக்சர்களாகவும் விளாசினார். 27 பந்துகளில் 50 ரன்களை தொட்ட அவர், 47 பந்துகளில் 97 ரன்களை எடுத்தார். மூன்று ரன்களில் செஞ்சுரியை தவறவிட்டாலும் ரசிகர்கள் நெஞ்சில் நிரந்தரமாக தங்கிவிட்டார் ரிஷாப். அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஷேவாக், கங்குலி உட்பட பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில், ’ஐபிஎல் வரலாற்றில், நான் பார்த்த இன்னிங்சில் இதுதான் பெஸ்ட். ரிஷாப் பான்டுக்கு வாழ்த்துகள்’என்று கூறியுள்ளார். இவரைப் போலவே டெல்லி அணியின் மற்றொரு பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனையும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com