தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: பந்துவீச்சாளர்களுக்கு சச்சின் அட்வைஸ்!

தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: பந்துவீச்சாளர்களுக்கு சச்சின் அட்வைஸ்!

தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: பந்துவீச்சாளர்களுக்கு சச்சின் அட்வைஸ்!
Published on

தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் புதிய யோசனை தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்நிலையில் டெஸ்டில் வெற்றிபெற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை கூறியுள்ளார்.

அஷ்வினுக்கு சாதகமாகும் வகையில் ஆடுகளத்தின் தன்மையை பந்துவீச்சால் கடினமாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்தால் சுழற்பந்து வீச்சுக்கு அதிக பலன் அளிக்கும் என அவர் யோசனை கூறியுள்ளார். 2010ல் கேப்டவுனில் நடந்த போட்டியில் ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, ஸ்ரீசாந்த் கூட்டணி போதிய அளவு ஆடுகளத்தினை கடினப்படுத்தியதால், ஹர்பஜன் சிங் 7 விக்கெட்களை வீழ்த்தியதையும் சச்சின் நினைவு கூர்ந்துள்ளார். 

அதே வியூகத்தை தற்போதைய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் கடைபிடிக்குமாறு யோசனை தெரிவிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com