குறைந்த வயதில் 200 விக்கெட்டுகள்! அசத்திய ரபாடா

குறைந்த வயதில் 200 விக்கெட்டுகள்! அசத்திய ரபாடா
குறைந்த வயதில் 200 விக்கெட்டுகள்! அசத்திய ரபாடா

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரபாடா படைத்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி 14 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. கராச்சியில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி இன்று 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் பட்டியலில் ரபாடா இணைந்துள்ளார். மேலும் குறைந்த வயதில் மற்றும் குறைந்த பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் ரபாடாவுக்கும் ஓர் இடம் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com