இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக் கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர், இப்போது நடந்து வந்தது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி, ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி விட்டது.
(ஹென்ட்ரிக்ஸ்)
இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி, ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. அந்த அணியின் ஹென்ட்ரிக்ஸ் 66 ரன்னும் பிரிடோரியஸ் 42 பந்தில் 77 ரன்னும் டுமினி 14 பந்தில் 34 ரன்னும் எடுத்தனர்.
(பிரிடோரியஸ்)
பின்னர் இலங்கை அணி, விளையாட வந்தபோது மழை குறுக்கிட்டதால் 17 ஒவர்களில் 183 ரன் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, தென்னாப்பிரிக்காவின் துல்லியமான பந்துவீச்சுக்கு முன் தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அதிகப்பட்சமாக விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 38 ரன்னும் உதானா 36 ரன்னும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் பெலுக்வாயோ 4 விக்கெட்டையும் ஜூனியர் டாலா, லுதோ சிபம்லா தலா 2 விக்கெட்டையும் வீத்தினர்.

