லூஸ் பால் போட்டாலே இந்தியர்கள் 6, 4 தான் அடிக்கிறார்கள்: தென்னாப்பிரிக்க கோச்!

லூஸ் பால் போட்டாலே இந்தியர்கள் 6, 4 தான் அடிக்கிறார்கள்: தென்னாப்பிரிக்க கோச்!

லூஸ் பால் போட்டாலே இந்தியர்கள் 6, 4 தான் அடிக்கிறார்கள்: தென்னாப்பிரிக்க கோச்!
Published on

சுழற்பந்து வீச்சாளர்கள் ஒரு லூஸ் பந்து போட்டாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் 6 அல்லது 4 அடிக்கிறார்கள் என தென்னாப்பிரிக்க பேட்டிங்க் கோச் தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 32.2 ஓவர்களில் 118 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சஹால் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து 119 என்ற எளிமையான இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, கோலி-தவான் கூட்டணியில் 20.3 ஓவர்களிலேயே ஆட்டத்தை நிறைவு செய்தது. இதனால் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இதுதொடர்பாக பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்க் கோச் டேல் பென்கென்ஸ்டெய்ன், “எங்கள் வீரர்கள் சில பந்துகளை அடித்து ரன்களை உயர்த்த முயன்ற போது அது இந்திய வீரர்களின் கைகளுக்கு சென்று விக்கெட்டாக மாறியது. இதனால் எங்கள் வீரர்கள் ரன்களுக்கு அடித்து விளையாட முயன்ற போது விக்கெட் விழும் என்ற பயம் ஏற்பட்டது. ஆனால் இந்திய வீரர்கள் சுழற்பந்துகளை எதிர்கொள்ளும் போது ஏதேனும் ஒரு லூஸ் பால் கிடைத்தால் அதனை 4 அல்லது 6 ரன்களாக அடித்து விடுகின்றனர். இதன்மூலம் சுழற்பந்தை எதிர்கொள்ளும் விதத்தை அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டோம். சஹால் மற்றும் குல்தீப்பின் சுழற்பந்துகள் முற்றிலும் மாறுபட்ட வகையில் இருந்தது. அது எங்கள் வீரர்களுக்கு சவாலாக அமைந்தது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com