மகாராஷ்டிர கிரிக்கெட் அணி கேப்டனாக ருதுராஜ் நியமனம்

மகாராஷ்டிர கிரிக்கெட் அணி கேப்டனாக ருதுராஜ் நியமனம்
மகாராஷ்டிர கிரிக்கெட் அணி கேப்டனாக ருதுராஜ் நியமனம்

மகாராஷ்டிர கிரிக்கெட் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்

மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் சையது முஷ்தாக் அலி 20 ஓவர் கோப்பை தொடரில் மகாராஷ்டிர அணியை ருதுராஜ் வழிநடத்துவார் என அம்மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சையது முஷ்தாக் அலி கோப்பை தொடர் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் எலைட் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் சந்திக்க உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரரான ருதுராஜ், அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்து சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் மாநில அணிக்கு கேப்டனாக செயல்படும் பொறுப்பு ருதுராஜுக்கு கிடைத்துள்ளது. சையது முஷ்தாக் அலி கோப்பை தற்போது தமிழ்நாடு வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com