தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை துறந்தார் என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை துறந்தார் என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியை துறந்தார் என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத்
Published on

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகி உள்ளார் இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத். தனிப்பட்ட காரணங்களுக்காகவும், தொழிலில் கவனம் செலுத்தும் வகையிலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக நான் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. எனது பதவிக் காலத்தில் எனக்கு ஆதரவளித்து வந்த சங்க உறுப்பினர், நிர்வாகிகள், வீரர்கள், நகர மற்றும் மாவட்டங்களை சார்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2019 செப்டம்பரில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் ரூபா குருநாத். இந்திய நாட்டில் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com