RR VS SRH : ஹைதராபாத் வெற்றி பெற 155 ரன்கள் தேவை 

RR VS SRH : ஹைதராபாத் வெற்றி பெற 155 ரன்கள் தேவை 
RR VS SRH : ஹைதராபாத் வெற்றி பெற 155 ரன்கள் தேவை 

துபாயில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

இதனையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களை குவித்தது. 

ஓப்பனர் ராபின் உத்தப்பா 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 

பின்னர் சஞ்சு சாம்சனும், ஸ்டோக்ஸும் 56 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

சாம்சன் 36 ரன்களிலும், ஸ்டோக்ஸ் 30 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.

ஃபார்மில் உள்ள பட்லர் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க கேப்டன் ஸ்மித்தும் ரன் சேர்க்க தடுமாறினார்.

ஹைதராபாத் அணிக்காக தமிழக வீரர் விஜய் ஷங்கர் மற்றும் ரஷீத் கான் எக்கனாமியாக பந்து வீசினர். 19வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு செட் பேக் கொடுத்தார் ஜேசன் ஹோல்டர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com