யார் உள்ளே ? யார் வெளியே ? பெங்களூரு அணிக்கு 165 ரன் இலக்கு நிர்ணயித்தது  ராஜஸ்தான்

யார் உள்ளே ? யார் வெளியே ? பெங்களூரு அணிக்கு 165 ரன் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

யார் உள்ளே ? யார் வெளியே ? பெங்களூரு அணிக்கு 165 ரன் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

ராயல்சேலஞ்சஸ் பெங்களூரு வெற்றி பெற 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். 

இன்று மாலை 4 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ‘பிளே ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். 

இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் திரிபாதி மற்றும் ஆர்ச்சர் களம் இறங்கினர். 4 பந்துகளை சந்தித்த ஆர்ச்சர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ரகானே களம் இறங்கினார். இந்த ஜோடி ராஜஸ்தான்  அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தது. 

குறிப்பாக தொடக்க ஆட்டக்காரராக தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திக்கொண்டார் திரிபாதி. அணியின் ஸ்கோர் 101ஆக இருந்தபோது ரகானே 31 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இது வரை அணியில் சேர்க்கப்படாமல் இருந்த தென் ஆப்ரிக்காவின் கிளாசன் களம் கண்டார். இவர் 21 ரன்களில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், தொடக்க வீரர் ராகுல் திரிபாதி நிலைத்து நின்று அரைசதம் கண்டார். 

இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஒவர் முடிவுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத திரிபாதி 58 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். அதில் 3 சிக்சர்களும், 5 பவுண்டர்களும் அடங்கும். அடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூர் அணி 4.3 ஒவரில் ஒரு விக்கெட் இழந்து 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com