RR VS KXIP : ராஜஸ்தான் அதிரடி ஆட்டம் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

RR VS KXIP : ராஜஸ்தான் அதிரடி ஆட்டம் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 
RR VS KXIP : ராஜஸ்தான் அதிரடி ஆட்டம் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் நடப்பு ஐபிஎல் சீசனின் 50வது லீக் ஆட்டத்தில் விளையாடின. 

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. 

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தானுக்கு உத்தப்பாவும், பென் ஸ்டோக்ஸும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 

இருவரும் 33 பந்துகளில் 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அதில் ஸ்டோக்ஸ் மட்டும் 26 பந்துகளில் 50 ரன்களை அடித்திருந்தார்.

தொடர்ந்து இறங்கிய சஞ்சு சாம்சனும், உத்தப்பாவும் 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

உத்தப்பா 30 ரன்களில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 48 ரன்களை குவித்தார்.

இறுதியில் பட்லரும், ஸ்மித்தும் அதிரடியாக விளையாடி 17.3 பந்துகளில் 186 ரன்களை குவித்தனர். 

இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com