பெங்களூரு அணிக்கு கோப்பை: சூதாட்டக்காரர்கள் கணிப்பு
ஐபிஎல் 10வது சிசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என சூதாட்டக்காரர்கள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டின் போது செல்போன் செயலி மூலம் மூலம் சூதாட்டம் நடைப்பெற வாய்ப்புள்ளது. பல நாடுகளில் சூதாட்டம் சட்டபூர்வமாக உள்ள நிலையில், கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பயன்படுத்தப்படும் நிறைய ஆப்கள் எளிதாக கிடைப்பதாகவும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரலையாக பார்க்கவும் சூதாடவும் சுமார் 35 ஆப்கள் பயன்படுத்தப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூதாட்டக்காரர்களில் நிறைய பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெரும் என கருதுகின்றனர். போட்டிகள் வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் அவர்களின் ஆட்டத்தை பொருத்து சூதாட்டம் நடைபெறும். எந்த அணி வெற்றி பெறும் என்பது மட்டுமல்லாமல் ஒரு வீரர் சதம் அடிப்பாரா மாட்டாரா எனவும் சூதாடப்படுவதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், பணத்திற்குப் பதில் தங்கம் மற்றும் பல்வேறு சொத்துக்களை வைத்து சூதாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.