கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. ஏபி டி வில்லியர்ஸ் காய்ச்சலால் இன்று விளையாடவில்லை.
29-வது ஐபிஎல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணி வீரர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் பெங்களூர் அணியின் முன்னணி வீரரான ஏபி டி வில்லியர்ஸ் காய்ச்சல் காரணமாக இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பவன் நெகி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக டிம் சவுத்தி, மனன் வோரா, முருகன் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.