"இந்திய பவுலர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்" ராஸ் டெய்லர் எச்சரிக்கை

"இந்திய பவுலர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்" ராஸ் டெய்லர் எச்சரிக்கை

"இந்திய பவுலர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்" ராஸ் டெய்லர் எச்சரிக்கை
Published on

பும்ராவை மட்டுமே குறிவைத்தால் எங்கள் பேட்ஸ்மேன்களின் நிலை பரிதாபமாகிவிடும் என்று நியூசிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியாவும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்தும் வென்றன. இதனையடுத்து இவ்விரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர் வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராஸ் டெய்லர் மனம் திறந்து பேசினார்.

அப்போது பேசிய டெய்லர் " நாங்கள் பும்ராவை மட்டுமே குறிவைத்து ஆடினால், எங்கள் பேட்ஸ்மேன்கள் சிக்கலுக்குள்ளாவார்கள். ஏனென்றால் இந்தியாவின் ஒட்டுமொத்த பவுலர்களும் பிரமாதமாக பந்துவீசக் கூடியவர்கள். அதிலும் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பினால் இந்திய அணியே வேறுமாதிரி இருக்கும். ஏனென்றால் இந்திய அணி உலக தரத்திலான பேட்ஸ்மேன்களை தங்களது வரிசையில் கொண்டுள்ளது. நாங்கள் சிறப்பாகவும் முழு திறனுடன் செயல்பட்டால் மட்டுமே வெற்றி கிட்டும்" என்றார்.

ராஸ் டெய்லருக்கு இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி அவருக்கு 100ஆவது போட்டியாகும், இது குறித்து பேசிய டெய்லர் " 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. முன்னாள் வீரர்கள் பலர் எனக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரன் குவிக்கும் பசி எனக்கு இன்னும் அடங்கவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என நினைக்கிறேன்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com