நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பார்க்க முடியாமல் அழுத சிறுவனை, அவரே நேரில் அழைத்து கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ரஷ்யாவில் வீரர்கள் வாகனத்தில் ஏறச் சென்ற போது, ரொனால்டோவை அருகில் சென்று காண முயன்ற சிறுவனுக்கு அது கைகூடவில்லை. இதனால் மனம்வருந்திய அந்தச் சிறுவன் கண்ணீர் விட்டான். இதனை அறிந்த ரொனால்டோ பேருந்தை விட்டு இறங்கிச் சென்று சிறுவனை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதேபோல், தம்மைக் காணத் துடிக்கும் குழந்தைகளை தேடிச் சென்று அன்பு பாராட்டுவது ரொனால்டோவின் வழக்கமாக உள்ளது.