ஒரே நேரத்தில் 2 காதலிகளை திருமணம் செய்யும் கால்பந்து ஹீரோ!
பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது இரண்டு காதலிகளை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
பிரேசில் கால்பந்து அணியின் சூப்பர் ஸ்டார் ரொனால்டினோ. 38 வயதாகும் இவர், 2002-ம் ஆண்டு பிரேசில் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். ’பிபா’வின் மிகச் சிறந்த வீரர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரொனால்டினோ, பிரிசில்லா கோயலோ, பியட்ரிஸ் சவுசா ஆகிய இளம் பெண்களுடன் பழகி வந்தார்.
பியட்ரிஸுடன் 2016-ல் இருந்து பழகத் தொடங்கிய அவர், அதற்கு முன்பே பிரிசில்லாவை பழகி வந்தார். கடந்த ஜனவரியில், இருவரிடமும் காதலைக் கூறியுள்ளார். இருவருடனும் மோதிரம் மாற்றிக் கொண்டார். தனது வீட்டில் இரண்டு காதலிகளுடன் டிசம்பரில் குடியேறிய அவர், வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.