‘காதல் விசித்திரமானது’ புகைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்மேனான ‘ஹிட் மேன்’ ரோஹித் ஷர்மா கொரோனா வைரஸ் தொற்றினால் பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் வீட்டிலேயே உள்ளார்.
அவ்வபோது தனது படம் மற்றும் குடும்பத்தினர் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ரோஹித் ஷர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகாவும் வெவ்வேறு இடங்களில் ஒரே விதமான போஸை கொடுத்துள்ளனர். அந்த இரண்டு படத்தையும் இணைத்து ‘காதல் விசித்திரமானது’ என்ற கேப்ஷனோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரோஹித் ஷர்மா. அந்த படம் ரசிகர்களின் மனதை வென்றதோடு, சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகாவும் நீண்ட நாட்கள் காதலித்து மண வாழ்க்கையில் இணைந்தவர்கள். சமீரா என்ற ஒரு வயது மகளும் இந்த இணையருக்கு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ரோஹித் ஷர்மா பகிர்ந்துள்ள அந்த படத்தில் இருவது போஸும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போதும், அவரது மனைவி ரித்திகா வீட்டில் இருந்த போதும் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
‘எஸ்’ மாதிரியான வடிவத்தில் இருவரும் அந்த போட்டோவில் காட்சியளிக்கின்றனர்.
‘கொரோனா காலத்தில் பொழுதை செலவிட போனில் பழைய படங்களை புரட்டி பார்த்த போது நாங்கள் இருவரும் ஒரே மாதிரியாக வெவ்வேறு இடங்களில் போஸ் கொடுத்திருப்பதை பார்த்தேன். இது எதேச்சையாக நடந்திருந்தாலும் என மனதுக்கு மிகவும் நெருக்கமான படம்’ என தெரிவித்துள்ளார் ரோஹித் ஷர்மா.
அடுத்த சில நாட்களில் ரோஹித் ஷர்மா ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த ஆயத்தமாகி வருகிறார்.

