கிரேடு உயர்த்தியும் சொதப்புறாரே? ரோகித்தை கலாய்க்கும் ரசிகர்கள்!
ஒரு நாள் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதம் உட்பட சில சாதனைகளை தனக்குள் வைத்திருந்தாலும் சமீபத்தில் ரோகித் சர்மாவின் டி20 ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 போட்டியிலும் இப்போது இலங்கையில் நடக்கும் டி20 தொடரிலும் ரோகித்தின் ரன் குவிப்பு, சொல்லும்படியாக இல்லை.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ’ஏ பிளஸ்’ கிரேடுக்கு உயர்த்தியுள்ளது. இதையடுத்து அவரது சம்பளம் ஆண்டுக்கு ரூ.7 கோடியாக உயர்ந்துள்ளது. சம்பளம் அதிகமாக வழங்கப்பட்ட நிலையிலும் இவர் இப்படி மோசமாக ஆடி வருவது ரசிகர்களை கோபம் அடையச் செய்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அவரை ரசிகர்கள் கடுமையாக கலாய்த்துள்ளனர்.
’பொதுவாக நன்றாக வேலை பார்க்காதவர்களுக்குத்தான் கம்பெனிகளில் சம்பளம் அதிகம் தருவார்கள். ரோகித்துக்கும் அப்படித்தான் போல’ என்று ஒரு ரசிகர் கிண்டலடித்துள்ளார்.
மற்றொரு ரசிகர், ’இலங்கைக்கு எதிராகத்தான் ரோகித் சிறப்பாக விளையாடுவார் என்று சொன்னவர்கள் யார்?’ என்று கேட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர், ‘ரோகித் 40 ரன்களை கடந்துவிட்டார், கடந்த 15 இன்னிங்ஸில்...’ என்று கூறியுள்ளார். இதே போல இன்னும் கடுமையான சில ரசிகர்கள் அவரை கலாய்த்துள்ளனர்.