எந்த வரிசையில் இறங்குவார் ரோகித்? சர்ப்பிரைஸ் சர்மா!
பதினோறாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா மும்பையில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களத்தில் இறங்குவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சென்னை அணியை சந்திக்க தயாராகி விட்டதாகத் தெரிவித் துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, ‘மும்பை அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருக்கிறது. எல்வின் லெவிஸ் (வெஸ்ட் இண்டீ ஸ்), இஷான் கிஷான் போன்ற சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். அதனால், நான் ஓபனிங்கில் இறங்கு வேனா என்பது பற்றி தெரியவில்லை. எந்த வரிசையில் இறங்கி ஆடுவேன் என்பதை சர்பிரைஸாக வைத்திருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே சிறந்த அணி. அணிக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் எங்களைப் பாதிக்காது. ஓர் அணியாக நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக இதைத்தான் செய்து வந்தோம். தொடரை வெல்ல என்ன வேண்டுமோ அது எங்களிடம் இருக்கிறது.
முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். இனி களத்தில் பார்க்க வேண் டியதுதான். ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டியிருப்பதால், நெருக்கடி இருப்பதாக நினைக்க மாட்டேன். நான் அப்படி பார்க்கவில்லை. அதை பொறுப்பாக எடுத்துகொள்கிறேன். பெருமையாகவும் பார்க்கிறேன்’ என்றார்.