இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அபார சதம் அடித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவில் இழந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இப்போது ஆடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பந்துவீச்சைத்தேர்வு செய்தார்.
இதையடுத்து ரோகித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான், 68 ரன்னில் திரிமன்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ரோகித்துடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினர். வேகமாக ஆடிய ஸ்ரேயாஸ் அரை சதம் அடித்தார். ரோகித் அபார சதம் அடித்தார். இது அவரது 16 வது சதம் ஆகும்.
40 ஓவர் முடிவில் இந்திய அணி, 245 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் 101 ரன்களுடனும் ஸ்ரேயாஸ் 68 ரன்களுடன் ஆடி வருகின்றனர்.