சச்சின் - சேவாக் ஜோடியை பின்னுக்கு தள்ளிய ரோகித் - தவான் ஜோடி

சச்சின் - சேவாக் ஜோடியை பின்னுக்கு தள்ளிய ரோகித் - தவான் ஜோடி

சச்சின் - சேவாக் ஜோடியை பின்னுக்கு தள்ளிய ரோகித் - தவான் ஜோடி
Published on

ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த ஜோடி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த சச்சின் சேவாக் ஜோடியை ரோகித் தவான் ஜோடி பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்த ஜோடி பட்டியலில் சச்சின் கங்குலி ஜோடி முதலிடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரத்து 227 ரன்கள் குவித்து  இன்னும் முதலிடத்தில் இருந்து வருகின்றனர்.

இவர்களை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் சச்சின் சேவாக் ஜோடி அதிக ரன்கள் எடுத்த ஜோடி பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இவர்கள் ஜோடி 4 ஆயிரத்து 387 ரன்கள் குவித்து இரண்டாம் இடத்தில் இருந்தனர். 

இந்நிலையில் நேற்று மொஹாலியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் தவான் - ரோகித் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் தவான் 143 விளாசினார். ரோகித் சர்மா 95 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் தவான் ரோகித் ஜோடி 4 ஆயிரத்து 571 ரன்கள் எடுத்து சச்சின் சேவாக் ஜோடியை பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் நான்காவது இடத்தில் ராகுல் டிராவிட் - கங்குலி ஜோடியும் 5 வது இடத்தில் ரோகித் - விராட் ஜோடியும் அதிக ரன்கள் அடித்த ஜோடி பட்டியலில் உள்ளது.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com