
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்களை அடித்துள்ள நிலையில், வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை அடித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, இங்கிலாந்தில் நடைபெறும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா சதமடித்துள்ளார். இது வெளிநாட்டு மண்ணில் அவர் அடித்துள்ள முதல் சதமாகும்.
இரண்டாவது இன்னிங்சில் 204 பந்துகளை சந்தித்த அவர், 12 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் தனது 8வது சதத்தை பதிவு செய்துள்ளார். 43-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரோகித் சர்மா டெஸ்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.