9வது டெஸ்ட் சதமடித்த ரோகித் சர்மா! 3 வடிவத்திலும் சதமடித்த முதல் இந்திய கேப்டனாக சாதனை!

9வது டெஸ்ட் சதமடித்த ரோகித் சர்மா! 3 வடிவத்திலும் சதமடித்த முதல் இந்திய கேப்டனாக சாதனை!

9வது டெஸ்ட் சதமடித்த ரோகித் சர்மா! 3 வடிவத்திலும் சதமடித்த முதல் இந்திய கேப்டனாக சாதனை!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிரோபியின் முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார் ரோகித் சர்மா.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடுகிறது. இந்நிலையில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரானது நேற்று தொடங்கப்பட்டது.

நேற்று தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் முகமது சமி இருவரும், ஆஸ்திரேலியாவின் ஓபனிங்க் பேட்டர்களான உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்ற, 2 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி.

பின்னர் கைக்கோர்த்த லபுசனே மற்றும் ஸ்மித் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். ஆனால் அதற்கு பிறகு பந்துவீச வந்த ஜடேஜா ஆஸ்திரேலியாவை தனது சுழலில் திக்குமுக்காட வைத்தார். அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி, 177 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆஸ்திரேலியாவின் இளம் சுழற்பந்துவீச்சாளரான டோட் முர்பி, தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கே எல் ராகுலை 20 ரன்களை வெளியேற்றிய முர்பி, சீரான இடைவெளியில் அஸ்வின், புஜாரா, விராட் கோலி என அடுத்தடுத்து பெரிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

9ஆவது டெஸ்ட் சதமடித்த ரோகித் சர்மா!

ஒரு புறம் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் தனது 9ஆவது சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 14 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விளாசி 106 ரன்களுடன் விளையாடி வருகிறார். இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களில் தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் களத்தில் ஆடிவருகின்றனர்.

3 கிரிக்கெட் வடிவத்திலும் சதமடித்த முதல் இந்திய கேப்டன் மற்றும் 4ஆவது சர்வதேச கேப்டன்!

கிரிக்கெட்டின் ஒடிஐ, டி20, டெஸ்ட் என 3 வடிவத்திலும், சதமடித்த முதல் இந்திய கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மா, இதற்கு முன்பு இந்த சாதனையை படைத்த இலங்கையின் அணியின் திலகரத்னே தில்சன், தென்னாப்பிரிக்க அணியின் பஃப் டியூ ப்ளசிஸ் மற்றும் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமை தொடர்ந்து, 4ஆவது சர்வதேச கேப்டனாக 3 வடிவத்திலும் சதமடித்து சாதனையை படைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com