தசைப்பிடிப்பால் கடும் அவதி : ஒருநாள், டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் விலகல்?

தசைப்பிடிப்பால் கடும் அவதி : ஒருநாள், டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் விலகல்?

தசைப்பிடிப்பால் கடும் அவதி : ஒருநாள், டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் விலகல்?
Published on

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா விலகியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்தது. இதில், 3ஆவது மற்றும் 4ஆவது டி20 போட்டிகளில் சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ரோகித் சர்மாதான் கேப்டனாக இருந்தார். நேற்றையப் போட்டியில், 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரோகித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ரிடையர்ட் ஹர்ட் முறையில் அவர் பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் பீல்டிங் செய்யவும் அவர் வரவில்லை. இதனால் பகுதிநேர கேப்டனாக விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுல் செயல்பட்டார். இதனையடுத்து, தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்ட ரோகித் சர்மா, ஒன்றிரண்டு நாட்களுக்குள் குணமாகி விடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தசைப்பிடிப்பு காரணமாக அவதிபட்டு வந்த ரோகித் முழுமையாக குணமடையாததால் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ரோகித் தற்போது தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் தற்போது விளையாடுவது சரியாக இருக்காது. இதனையே பிசியோ ஆலோசகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவருக்கு பாதிப்பு எவ்வளவு தூரம் மோசமாக உள்ளது என்பதை தெரியப்படுத்துவோம். இந்த தொடரில் இனி அவர் விளையாடமாட்டார்’ என்று தெரிவித்தார்.

நியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் 8ம் தேதியும், 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11ம் தேதியும் நடைபெற உள்ளது. அதன்பின் முதல் டெஸ்ட் தொடர் வெலிங்டனில் 21ம் தேதியும், 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 29ம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ரோகித் சர்மா விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com