“ஹிந்துஸ்தானுக்கோ.. ஹிந்துஸ்தானுகோ..” - மகளுக்காக தாலாட்டு பாடிய ரோஹித்

“ஹிந்துஸ்தானுக்கோ.. ஹிந்துஸ்தானுகோ..” - மகளுக்காக தாலாட்டு பாடிய ரோஹித்

“ஹிந்துஸ்தானுக்கோ.. ஹிந்துஸ்தானுகோ..” - மகளுக்காக தாலாட்டு பாடிய ரோஹித்
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, ரித்திகா என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களுக்கு எப்போதும் மனைவியை அழைத்து வருவார் ரோஹித். இவர்களின் ரொமான்ஸ் இந்திய கிரிக்கெட் டீமில் பிரபலமான ஒன்றும் கூட. ரித்திகா -  ரோஹித் தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. 

ரோஹித் தந்தை ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்தனர். அவ்வப்போது தன் மகளின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லைக்ஸ்களை ரோஹித் அள்ளுவார்.

இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியை வழிநடத்தவுள்ள ரோஹித், தான் ஒரு பாடகர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

அவர் பாடும் பாடலுக்கு அவரது மகளையே ஆடவும் வைத்துள்ளார். பின்னணியில் ஓடும் பாடலை தானும் பாடிக்கொண்டு கைக்குழந்தையான தனது மகளை இசைக்கு ஏற்ப அங்கும் இங்கும் அசைக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் பகிர்ந்துள்ளார். தேச உணர்வை ஊட்டும் அந்தப்பாடல் வீடியோவை ஷேர் செய்து ரோஹித் மற்றும் அவரது மகளின் க்யூட் ரியாக்‌ஷன்களை பாராட்டி வருகின்றனர்.  அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com