’யோ-யோ’வைத் தவிர்த்துவிட்டு எங்கே போயிருந்தார் ரோகித்?

’யோ-யோ’வைத் தவிர்த்துவிட்டு எங்கே போயிருந்தார் ரோகித்?

’யோ-யோ’வைத் தவிர்த்துவிட்டு எங்கே போயிருந்தார் ரோகித்?
Published on

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இதற்காக வரும் 23ம் தேதி அங்கு புறப்பட்டுச் செல்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், தொடர்களில் பங்கேற்பதற்கு முன்பாக வீரர்களுக்கு 'யோ-யோ' என்ற உடல் தகுதித் தேர்வை நடத்துவது வழக்கம். இதில் வெற்றிபெற்றால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும். இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணி, இந்திய ஏ அணி வீரர்களுக்கான யோ-யோ டெஸ்ட் சமீபத்தில் நடந்தது. இதில் ஏ அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், ஒரு நாள் அணியில் இடம்பெற்ற அம்பத்தி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் தேர்வு பெறவில்லை. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முன்னணி வீரர்களுக்கு கடந்த 15-ஆம் தேதி ’யோ யோ’ தேர்வு நடந்தபோது, அந்த நாளில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இதனால், சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளியாயின. ரோகித் சர்மா, ’யோ யோ’ உடல் தகுதி தேர்வில் தகுதி பெறவில் லை என்றும் அவருக்குப் பதிலாக ரஹானே இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டன. இதையடுத்து ரோகித்தை விமர்சித்தும் விவா தங்கள் இடம்பெற்றன. சில மீடியாவும் சேனல்களும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு விவாதித்தன.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நேற்று நடந்த யோ யோ டெஸ்டில் ரோகித் தேர்வு பெற்றார். இதன் மூலம், இங்கிலாந்து தொடரில் அவர் பங்கேற்பது உறுதியானது. 

’ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக, 15-ம் தேதி நடக்கும் ’யோ யோ’ டெஸ்ட்டில் பங்கேற்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருந்தார். மற்றொரு நாளில் அந்த டெஸ்டில் பங்கேற்க அனுமதி கேட்டிருந்தார்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் மானேஜர் சபா கரீம் கூறியிருந்தார். அதன்படி நேற்று பங்கேற்று தேர்வு பெற்றுள்ளார் ரோகித். இந்த இடைப்பட்ட காலத்தில் எங்கு சென்றி ருந்தார் ரோகித்?

ரோகித் சர்மா, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கைகடிகார நிறுவனம் ஒன்றின் விளம்பர தூதராக இருக்கிறார். அதன் அழைப்பின் பேரி ல், ரஷ்யாவின் நடைபெறும் ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடக்க விழாவுக்காகச் சென்றிருந்தார். அந்த நிறுவனம் நடத்திய மெகா பார்ட்டியில் கலந்துகொண்டார். இதில் பிரெஞ்ச் நாட்டின் முன்னாள் கால்பந்துவீரர் கிறிஸ்டியன் கரெம்பியூ, கஸகஸ்தான் பாக்ஸிங் சாம்பியன் கென்னடி குளோவ்கின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  மனைவியுடன் அங்கு சென்றிருந்த ரோகித் அதை முடித்துவிட்டு பிறகு அங்கு பல இடங்களைச் சுற்றிபார்த்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். இதனால்தான் யோ யோ டெஸ்ட்டில் குறிப்பிட்ட நாளி ல் பங்கேற்க முடியாமல் போனது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com