ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்
ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
ஒருநாள் தரவரிசையைப் பொறுத்தவரை 884 புள்ளிகளுடன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். துணைக் கேப்டன் ரோகித் சர்மா 842 புள்ளிகளுடன் இடண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஜோ ரூட்(818), டேவிட் வார்னர் (803) ஆகியோரை தொடர்ந்து ஷிகர் தவான் 802 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார்.
ரோகித் சர்மா இரண்டாவது முறையாக தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம்தான் அவர் முதல்முறையாக இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆசியக் கோப்பை தொடரில் 342 ரன்கள் குவித்த ஷிகர் தவான் 4 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல், ரோகித் சர்மா இந்த தொடரில் 317 ரன்கள் எடுத்தார்.
ஆசியக் கோப்பை தொடரில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் கலக்கிய ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 383 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹாசன்(420) உள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையை பொறுத்தவரை இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஆப்கான் வீரர் ரஷித் கான் (788), மூன்றாவது இடத்தில் 700 புள்ளிகளுடன் குல்தீப் யாதவ் உள்ளார்.
டி20 போட்டிகளில் ஆரோன் பின்ச், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியும் முதலிடத்தில் உள்ளனர்.