'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ

'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ
'நாளைய போட்டியில் இருந்து அஸ்வின், ரோகித் சர்மா அவுட்' அணியை அறிவித்தது பிசிசிஐ

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை பெர்த்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் விளையாடமாட்டராகள் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை களமிறங்கவுள்ள இந்திய அணியின் 13 வீரர்களை கொண்ட பட்டியலை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் பெயர்கள் இடம் பெறவில்லை.

இதனையடுத்து நாளை நடைபெறவுள்ளப் போட்டியில் ஹனுமா விஹாரி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.

அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. புஜாரா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா, பங்கேற்பதாக இருந்தது.  ஆஸ்திரேலிய போர்டு லெவன் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது அவர் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரை, முரளி விஜய்-க்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது எல்லைக் கோட்டின் அருகே வந்த பந்தை பிடிக்க முயன்றபோது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் குணமாகிவிட்டார் என்று கூறப்பட்டது. பயிற்சியின் போது அவர் கலந்துகொண்டார். இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று நடந்த வலைப்பயிற்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவரது காயம் இன்னும் குணமாகவில்லை என்று தெரிகிறது. அதோடு, ரோகித் சர்மாவும் காயமடைந்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின்போது அவரது பின் முதுகில் காயம் ஏற்பட்டது. அது குணமாகாததால் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என்று தெரிகிறது.

இதனையடுத்து இந்திய அணியின் 13 வீரர்கள் கொண்ட பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோலி, முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது சமி, பும்ரா, புவேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 11 வீரர்கள் நாளை ஆஸிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சேர்க்கப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com