ஐபிஎல்லில் புது சாதனையை படைத்த ரோகித் சர்மா...!

ஐபிஎல்லில் புது சாதனையை படைத்த ரோகித் சர்மா...!

ஐபிஎல்லில் புது சாதனையை படைத்த ரோகித் சர்மா...!
Published on

ஐபிஎல் தொடரில் ஐந்தாயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் ரோகித் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

ஐபிஎல் 2020 தொடரின் 13 ஆவது போட்டி கிங்ஸ் லெவென் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 6 ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 100 ரன்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 80 ரன்களை விளாசினார்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மொத்தமாக 4998 ரன்களை ரோஹித் சர்மா அடித்திருந்தார். இன்னும் 2 ரன்களை அடித்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைக்க இருந்தார்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் இரண்டாவது ஓவரை முகமது சமி வீசினார். அதில் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி 5002 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். ஏற்கெனவே முதலிடத்தில் விராட் கோலி 5430 ரன்களுடனும் இரண்டாவது இடத்திலும் சுரேஷ் ரெய்னா 5368 ரன்களுடனும் பட்டியலில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com