மிரட்டுவாரா ரோகித்? தென்னாப்பிரிக்கா-வாரிய லெவன் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

மிரட்டுவாரா ரோகித்? தென்னாப்பிரிக்கா-வாரிய லெவன் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

மிரட்டுவாரா ரோகித்? தென்னாப்பிரிக்கா-வாரிய லெவன் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்
Published on

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வாரிய தலைவர் லெவன் அணி- தென்னாப்பிரிக்க அணிகள்ள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில் அடுத்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 2 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

அதற்கு முன்பாக, தென்னாப்பிரிக்க அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு இடையே, 3 நாள் பயிற்சி ஆட்டம் நடக்கிறது. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இன்று தொடங்கும் இந்தப் போட்டியில், கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு ரோகித் சர்மா கேப்டன். 
டெஸ்ட் போட்டியில் தடுமாறி வரும் ரோகித் சர்மாவை, இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவதால், ரோகித்துக்கு அந்த வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளது. அதற்காகத் தன்னை தயார்படுத்தும் விதமாக இந்தப் பயிற்சி அவருக்கு அமையும்.

பாப் டு பிளிசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில், ரபாடா, நிகிடி, பிலாண்டர் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் மிரட்டுவார்கள். அவர்களை சமாளித்துவிட்டால் அது ரோகித்துக்கு உதவும். பும்ராவுக்கு பதிலாக அழைக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.


அணி விவரம்:
கிரிக்கெட் வாரிய லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங் பஞ்சால், ஈஸ்வரன், கருண் நாயர், சித்தேஷ் லாட், கே.எஸ்.பாரத், ஜலஜ் சக்சேனா, தர்மேந்திரசிங் ஜடேஜா, அவேஷ் கான், இஷன் போரெல், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

தென்ஆப்பிரிக்கா: 
பாப் டு பிளிசிஸ் (கேப்டன்), பவுமா, டி புருன், குயின்டான் டி காக், டீன் எல்கர், ஜூபைர் ஹம்சா, கேஷவ் மகராஜ், மார்க்ராம், முத்துசாமி, நிகிடி, நார்ஜே, பிலாண்டர், டேன் பிய்ட், ரபடா, ஹென்ரிச் கிளாசன்.

காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதனால் போட்டி பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com