தியோதர் கோப்பை அணிகள் அறிவிப்பு: ரோகித் சர்மா, பார்த்தீவ் பட்டேல் கேப்டனாக நியமனம்
தியோதர் கோப்பைக்கான அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தியோதர் கோப்பையில் இந்தியா ப்ளூ அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும் இந்தியா ரெட் அணிக்கு கேப்டனாக பார்த்தீவ் பட்டேலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் ஹசாரே தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு, இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் அணிகளுக்கு இடையில் தியோதர் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாடவிருக்கும் 28 வீரர்களின் பட்டியல் இன்று வெளியடப்பட்டது. இந்த தொடரில் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோனி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்தியா ப்ளூ இடம்பிடித்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா எந்த அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. இது 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படுவது குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ப்ளூ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), மந்தீப் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடு, மனோஜ் திவாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்பஜன் சிங், குருணால் பாண்டியா, ஷபாஸ் நதீம், சித்தார்த் கவுல், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, பங்கஜ் ராவ்.
இந்தியா ரெட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
பார்த்தீவ் பட்டேல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், மணீஷ் பாண்டே, மயங் அகர்வால், கேதர் ஜாதவ், இஷாங்க் ஜக்கி, குர்கீரத் மான், அக்சார் பட்டேல், அக்ஷய் கார்னீவர், அசோக் திண்டா, குல்வாந்த் கெஜ்ரோலியா, தவால் குல்கர்னி, கோவிந்த போட்டர்.