\
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: 3வது சுற்றில் ஃபெடரர், மான்பில்ஸ்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: 3வது சுற்றில் ஃபெடரர், மான்பில்ஸ்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: 3வது சுற்றில் ஃபெடரர், மான்பில்ஸ்
Published on

கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்த தொடரின் இரண்டாம் நிலை வீரரான ஃபெடரர், இரண்டாவது சுற்றுப் போட்டியில் கனடாவின் போலான்ஸ்கி-யை எதிர்த்து விளையாடினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 

அடுத்த சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் டேவிட் ஃபெடரை எதிர்த்து ஃபெட‌ர் விளையாட உள்ளார். மற்றொரு போட்டியில் பிரான்சின் மான்பில்ஸ் , 6-க்கு 7, 7-க்கு 5, 7-க்கு 6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை‌ போராடி வென்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com