\
கத்தார் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்!

கத்தார் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்!

கத்தார் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர்!
Published on

கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

முன்னாள் நம்பர் ஒன் வீரரான சுவிட்ஸர்லாந்தினன் ரோஜர் பெடரர் வலது முழங்கால் காயத்துக்கு மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை ஓராண்டுக்கு மேலாக ஓய்வில் இருந்து வந்தார். இதனால் அமெரிக்க ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலியா ஓபன் தொடர்களில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்ட அவர் சுமார் 405 நாட்களுக்கு பிறகு கத்தார் ஓப்பன் தொடரில் மீண்டும் பங்கேற்றார்.  இதில் நேரடியாக 2-வது சுற்றில் களம் காணும் வாய்ப்பை பெற்ற அவர் 7-6 (10-8), 3-6, 7-5 என்ற செட் கணக்கில் போராடி டேன் இவான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com